இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவது கேக். இது பெருமளவு பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற விழாக்களுக்கு முதன்மையாக பயன்படுகிறது. தேவை அதிகளவில் இருப்பதால் தூய்மையான முறையில் கேக் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் குறைவான முதலீட்டில் நிறைவான இலாபம் பெற முடியும்.

பேரீச்சம்பழ கேக் செய்ய தேவையான பொருட்கள்:

                         * மைதா - இரண்டரை கப்

                         * வெண்ணெய் - ஒன்றேகால் கப்

                         * பால் - ஒன்றரை கப்

                         * கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி)

                         * பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்

                         * ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி)

                         * பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி)

                         * வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்

                         * பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

                * மேலே குறிப்பிட்ட பொருட்களை தரமானதாக தேர்வு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 2டீஸ்பூன் மைதா தனியே எடுத்து வைத்து கொண்டு, பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

               * பேரீச்சம்பழத்தில் 2டீஸ்பூன் மைதா சேர்த்து பிசைந்து வையுங்கள். சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள். பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள். அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

              * கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் மைக்ரோ ஓவனில் வைத்து சூடேற்றி, வெளியே எடுத்தால் விற்பனைக்குத் தயார்.

விற்பனை முறைகள்:

                    *ஆர்டரின் படி பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்வதன் மூலம் அமோக இலாபம் பெறலாம். கடைகளுக்கும் கொடுத்து அதிக லாபம் அடையலாம்.

கேக் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை