வலிப்பு வரும்போது செய்யவேண்டியது :

                * பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும்.

                * நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

                * நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும்.

                * சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும்.

                * அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

வலிப்பு வரும்போது செய்யக்கூடாதது :

                * நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது.

                * காற்றோட்டமான சூழல் மிக அவசியம்.

                * வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது.

                * கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும்.

                * முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.

வலிப்பு வரும்போது செய்வதும், செய்யக்கூடாததும்

கருத்துகள் இல்லை