* பெரியளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. சிறியளவில் ஒரு தையல் மெசினோடு வீட்டிலேயே ஆரம்பித்து சிறிது சிறிதாக முன்னேற்றி பெரியளவில் இந்த தொழிலை செய்யலாம். இதற்கு தேவையானவை ஒன்று தையல் அறிவு மற்றது ஒரு தையல் இயந்திரம் , இவற்றோடு உதவி பொருட்களான நூல், ஊசி, பொத்தான், கத்தரிகோல், அளவு நாடா போன்றன. இந்த தொழில் குறித்த சில தகவல்களை கீழே காண்போம்.
* இந்த தொழிலை இரண்டு விதமாக செய்யலாம்.
* ஒன்று, முறைப்படி தையல் தொழில் கற்றுக்கொள்ளாமல், தையல் தொழிலோடு சம்பந்தப்பட்ட சில துணைத் தொழில்களை செய்து கொடுத்து சம்பாதிக்கலாம். அதாவது, தையல் தொழில் செய்யும் தெரிந்த பெண்கள், வீட்டுக்கு அருகில் உள்ள டெய்லரிங் கடை போன்றவற்றில் பேசி, பட்டன் தைத்தல், ஹெம்மிங் செய்தல், நூல் வெட்டி கொடுத்தல், எம்ப்ராய்டரி போன்ற துணைத்தொழில்களை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கி செய்து கொடுக்கலாம்.
* இரண்டாவது முறை, தையல் தொழிலை முறைப்படி கற்றுக்கொண்டு, பின்னர் ஒரு தையல் மெஷின் வாங்கி, வீட்டில் வைத்து பக்கத்து வீட்டுபெண்கள், உறவுக்கார பெண்களின் ஆடைகளை கூலிக்கு தைத்து கொடுக்கலாம். சில எம்ப்ராய்டரி தெரிந்த பெண்களை வேலைக்கு வைத்து அவர்களின் மூலம் எம்ப்ராய்டரி போன்ற வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக சாரி , சல்வார் , அபாயா போன்றவற்றுக்கு இப்போது நிறைய கிராக்கி உள்ளது.
* அத்தோடு, வீட்டு ஜன்னல் திரைசீலை , மேசை விரிப்பு போன்ற பொதுவான பலவற்றை சிறப்பாக வடிவமைக்க முடிந்தால் அது ஒரு நல்ல தொழிலாகிவிடும்.
* அதேபோல, இது சம்பந்தமான நூல்கள், இன்டர்நெட் பக்கங்களை வாசித்து புதிய புதிய ஆடை வடிவமைப்புகளை மேற்கொள்ளலாம். இதனால், பெண்கள் உங்களிடம் மிகவும் விரும்பி வருவார்கள்.
* மேலும் தெரிந்த ஆடை விற்பனை கடைகளுடன் பேசி அவர்களுக்கு ஆடைகளை தைத்து கொடுத்து சம்பாதிக்கலாம்.
* இந்த தொழிலில் நிறையவே சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் வகையில் பல்வேறு வடிவமைப்புகளை அறிமுகம் செய்தால் நமக்கென தனி இடத்தை சுலபமாக அடைந்து விட முடியும்.

கருத்துகள் இல்லை