நம் அன்றாட வாழ்வில் வீடுகளிலும் கோவில்களிலும் நாம் பயன்படுத்தும் ஓர் மகத்தான, மங்களகரமான பொருள்களில் குங்குமமும் ஒன்று. அதனுடய தேவை மற்றும் பயன்பாடுகளும் அதிகமாக இருப்பதால், குங்குமம் தாயாரித்து விற்பனை செய்தால் அதன் மூலம் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

                    * மஞ்சள் கிழங்கு

                    * வெங்காரம்

                    * படிகாரம் (வெங்காரம், படிகாரம் இவை இரண்டும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்).

                    * எலுமிச்சை பழச்சாறு

                    * நல்லெண்ணெய்

                    * வாசனைத் திரவியம் சிறு துளி

தயாரிக்கும் முறை :

                   * முதலில் மஞ்சள் கிழங்கை சிறு சிறு துண்டுகளாக்கி அதனை நன்கு பொடியாக அரைத்து, சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

                   * பின்பு வெங்காரம் மற்றும் படிகாரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு, அதனையும் பொடி போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

                   * பிறகு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெங்காரம், படிகாரத்தை தயாராக எடுத்து வைக்கவும்.

                   * எலுமிச்சைப்பழ சாறுடன் அரைத்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெங்காரம், படிகாரக் கலவையுடனும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

                   * பின்பு அந்த கலவையை நிழழில் போட்டு உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்தப்பிறகு செங்கல் தூள் நிறத்தில் இருக்கும். அதில் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து லேசாக பிசைந்து விட்டால் குங்குமம் இன்னும் டார்க் நிறமாக வரும்.

                  * இந்த குங்குமத்துடன் மல்லிகை, தாழம்பூ எசன்ஸ்களை இரண்டு அல்லது மூன்று துளி விட்டு கலந்து விட்டால் வாசனையாகவும் இருக்கும்.

                  * மஞ்சளின் வாசனையுடன் தயாரித்த குங்குமத்தை சிறு சிறு பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்யலாம்.

குங்குமம் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை