ஊதுபத்தி தயாரிப்பில் என்ன வருமானம் கிடைக்கும்? அதைத் தொழிலாக எடுத்துச் செய்ய முடியுமா என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால் ஊதுபத்தியின் தேவையானது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படிப்பட்ட ஊதுபத்தியை நாம் இயற்கை மூலிகைகளை கொண்டு மிக எளிமையான முறையில் வீட்டிலேயே உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
* கருவாப் பட்டை
* கோரைக் கிழங்கு
* சந்தன பவுடர்
* அடுப்பு கரி
* கருவா பிசின் அல்லது வெல்லக் கரைசல்
* பொட்டாசியம் நைட்ரேட் சிறிது
* மூங்கில் குச்சி
* ஊதுபத்தி செய்யும் இயந்திரம்
* பின்னர் அடுப்பு கரித்தூளுடன் சிறிது பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பொட்டாசியம் நைட்ரேட் ஆனது கரித்தூள் அணையாமல் தொடர்ந்து எரிய துணை புரியும்.
* நம்மிடமுள்ள கரித்தூளுக்கு நிகரான அளவுள்ள மூலிகை பொருட்களை எடுத்து அதனுடன் வெல்ல நீர்கரைசல் அல்லது கருவா பிசின் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* இக்கலவையை இயந்திரத்தில் கொட்டி மூங்கில் குச்சிகளை சரியான இடத்தில் பொருத்தி இயந்திரத்தை இயக்க வேண்டும்.
* இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் ஊதுபத்திகளை எடுத்து நிழலில் உலர வைக்க வேண்டும். உலர்ந்த ஊதுபத்திகளை எடுத்து பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
* இம்முறையில் செய்யப்பட்ட ஊதுபத்தியானது இயற்கை மூலிகைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் நம் உடல் நலத்திற்கும், சுற்றுபுறத்திற்கும் நன்மை விளைவிக்கும்.
ஊதுபத்தி செய்ய தேவையான பொருட்கள் :
* வெட்டி வேர்* கருவாப் பட்டை
* கோரைக் கிழங்கு
* சந்தன பவுடர்
* அடுப்பு கரி
* கருவா பிசின் அல்லது வெல்லக் கரைசல்
* பொட்டாசியம் நைட்ரேட் சிறிது
* மூங்கில் குச்சி
* ஊதுபத்தி செய்யும் இயந்திரம்
தயாரிக்கும் முறை :
* கருவாப் பட்டை, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, சந்தன பவுடர் மற்றும் அடுப்புக்கரி ஆகிய பொருட்களை தனித்தனியாக நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.* பின்னர் அடுப்பு கரித்தூளுடன் சிறிது பொட்டாசியம் நைட்ரேட் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பொட்டாசியம் நைட்ரேட் ஆனது கரித்தூள் அணையாமல் தொடர்ந்து எரிய துணை புரியும்.
* நம்மிடமுள்ள கரித்தூளுக்கு நிகரான அளவுள்ள மூலிகை பொருட்களை எடுத்து அதனுடன் வெல்ல நீர்கரைசல் அல்லது கருவா பிசின் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
* இக்கலவையை இயந்திரத்தில் கொட்டி மூங்கில் குச்சிகளை சரியான இடத்தில் பொருத்தி இயந்திரத்தை இயக்க வேண்டும்.
* இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் ஊதுபத்திகளை எடுத்து நிழலில் உலர வைக்க வேண்டும். உலர்ந்த ஊதுபத்திகளை எடுத்து பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
* இம்முறையில் செய்யப்பட்ட ஊதுபத்தியானது இயற்கை மூலிகைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதால் நம் உடல் நலத்திற்கும், சுற்றுபுறத்திற்கும் நன்மை விளைவிக்கும்.
கருத்துகள் இல்லை