அன்றாட வாழ்வில் டீ, காபி என்பது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்றாகும். ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் மூலிகை டீ, காபி பொடியை யார் வேண்டுமானாலும் எளிதில் தயாரிக்கலாம். தங்கள் பகுதியிலேயே விற்று லாபம் பார்க்கலாம். இப்போது இதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை விரிவாக காண்போம்.

மூலிகை டீத்தூள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் :

                * டீத்தூள்

                * ஆவாரம் பூ, தாமரை, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ, வேம்பு, அகத்திப் பூ

                * அரைக்கும் இயந்திரம்

                * சலிக்கும் இயந்திரம்

                * பேக்கிங் இயந்திரம்

தயாரிக்கும் முறை :

                 * ஆவாரம் பூ, தாமரை, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ, வேம்பு, அகத்திப் பூ ஆகியவற்றை தனித்தனியாக எடுத்து நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து 2 மணிநேரம் காய வைக்க வேண்டும்.

                 * பின்னர் அதை அரைக்கும் இயந்திரத்தின் மூலம் அரைத்து, சலித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் டீத்தூளை கலந்து பாக்கெட்டுகளில் அடைத்தால் விற்பனைக்கு தயார்.

மூலிகை காபி தூள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் :

                 * காபி தூள்

                 * சுக்கு, மிளகு விதை, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா

                 * அரைக்கும் இயந்திரம்

                 * சலிக்கும் இயந்திரம்

                 * பேக்கிங் இயந்திரம்

தயாரிக்கும் முறை :

                  * சுக்கு, மிளகு விதை, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா ஆகியவற்றை வெயிலில் நன்றாக காய வைக்கவும்.

                  * பின்னர் அதை அரைக்கும் இயந்திரத்தின் மூலம் அரைத்து, சலித்து இதனுடன் காபி தூளை கலந்து கொள்ள வேண்டும்.

                  * மூலிகை காபி தூள்களை 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

நன்மைகள் :

                  * தலைவலி, சளி, அஜீரணம், பசியின்மையை மூலிகை டீ நீக்கும். மூலிகை காபி இரத்த அணுக்களை அதிகப்படுத்தும். உடல் வலிமை, புத்துணர்ச்சி ஏற்படும். மூலிகைகள் பக்க விளைவுகள் இல்லா தவை.

விற்பனை செய்யும் முறை :

                       * டிபார்ட்மெண்டல் ஸ்டோர், மொத்த மளிகை கடைகளுக்கு விற்பனை செய்யலாம். மேலும் சிறிய மளிகைக்கடைகளுக்கும் சப்ளை செய்யலாம், வீடு வீடாகவும் அறிமுகப்படுத்தி விற்கலாம். சாதாரண டீ, காபியை விட மூலிகை டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்தை தருவதால் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள்.

மூலிகை டீ, காபி தூள் தயாரிக்கும் முறை

கருத்துகள் இல்லை