நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒரு தொழில் வாய்ப்பு அமைந்து இருக்கிறது. அதன் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு, முறையாக ஆரம்பித்தாலே நமக்கான தொழில் வாய்ப்பு பிரகாசமானதாக மாறிவிடும். அத்தகைய வகையில் உணவு சம்பந்தபட்ட தொழிலுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளதால், கொஞ்சம் புதுமையாக யோசித்தால் போதும், நமக்கென அங்கீகாரத்தை அடைந்து விட முடியும். இன்று கறிவேப்பிலை நம் உணவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது, என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இதனுடைய மருத்துவ குணங்கள் மிக அதிகம். ஆனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை அலச்சியப்படுத்துகிறோம். இதனை கொஞ்சம் வித்தியாசமாக, பொடியாக செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபம் ஈட்ட முடியும். இப்போது இப்பொடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம்.
* கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
* உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
* சீரகம் - 1/2 தேக்கரண்டி
* மிளகு - 1/2 தேக்கரண்டி
* மல்லி - 1/2 தேக்கரண்டி
* வர மிளகாய் - தேவைக்கு ஏற்ப
* உப்பு - தேவைக்கு ஏற்ப
* இந்த வறுத்த கலவையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நம் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாக்கெட்களில் அடைத்தால் விற்பனைக்குத் தயார் ஆகிவிடும்.
தேவையான பொருட்கள்:
* கறிவேப்பிலை - 1 கட்டு* கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
* உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
* சீரகம் - 1/2 தேக்கரண்டி
* மிளகு - 1/2 தேக்கரண்டி
* மல்லி - 1/2 தேக்கரண்டி
* வர மிளகாய் - தேவைக்கு ஏற்ப
* உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை விளக்கம் :
* முதலில் கறிவேப்பிலையை நீரில் அலசி உலர விட வேண்டும். உலர்ந்த கறிவேப்பிலையை அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்து மசாலா மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.* இந்த வறுத்த கலவையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நம் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்ட பாக்கெட்களில் அடைத்தால் விற்பனைக்குத் தயார் ஆகிவிடும்.
கருத்துகள் இல்லை