மண்ணின் வளத்தையும், மக்களின் நலனையும் சீர்குழைப்பதில் பெரும் பங்கு வகிப்பது பிளாஸ்டிக் மட்டுமே...! இதற்கு காரணம் இதன் மக்கிப்போகாத தன்மையும், மாசு விளைவிக்கும் வாயுவை வெளியிடும் பண்பே ஆகும். இதன் தீவிரத்தை உணர்ந்த பல நாடுகள் பிளாஸ்டிக்கை உபயோகிக்க தடை விதித்துள்ளன. இன்று நம் தமிழகத்திலும் இதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பேப்பர் பைகளை உபயோகிக்க வலியுறுத்தி வருகின்ற இந்த நேரத்தில் பேப்பர் பை தொழிலை நம்பி இறங்கினால் நிச்சயம் கை கொடுக்கும். இதற்கான முதலீடு பார்த்தால் மிகவும் குறைவுதான். நீங்கள் நினைக்கலாம் பேப்பரில் பை செய்வது சாத்தியமா, இதனை உபயோகப்படுத்த முடியுமா என்று..! ஆம் சாத்தியம்தான் இத்தொழிலில் சாதித்தோர் பலர் உள்ளனர். இப்போது இத்தொழிலை வீட்டிலேயே எப்படி தொடங்குவது என்பதைப்பற்றி விரிவாக காண்போம்.
* கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்
* மெட்டல் வளையம்
* பசை மற்றும் கைப்பிடிக்குத் தேவையான கயிறு
* அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம்.
* அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒன்றை ஒட்ட வேண்டும்.
* கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும்.
* துளை போட அந்த மெஷினையே பயன்படுத்தி கொள்ளலாம். கைப்பிடி கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும்.
* கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.
தேவையான பொருட்கள் :
* கோல்டன் யெல்லோ ஷீட் அல்லது டியூப்ளக்ஸ் ஷீட்* கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்
* மெட்டல் வளையம்
* பசை மற்றும் கைப்பிடிக்குத் தேவையான கயிறு
தயாரிக்கும் முறை :
* எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்று தான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும்.* அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம்.
* அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒன்றை ஒட்ட வேண்டும்.
* கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும்.
* துளை போட அந்த மெஷினையே பயன்படுத்தி கொள்ளலாம். கைப்பிடி கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும்.
* கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.
கருத்துகள் இல்லை