நம் அனைவருக்கும் மிட்டாய் என்றாலே பிடிக்கும் அதிலும் ஜவ்வுமிட்டாய் என்றால் சொல்லவே வேண்டாம். அதற்கு காரணம் அதன் சுவைதான். இன்றைய காலகட்டத்தில் நாம் மறந்து வரும் இனிப்பு வகையில் ஜவ்வுமிட்டாயும் ஒன்று, என்னதான் நாம் இப்போது பலவகையான மிட்டாய்களை சாப்பிட்டாலும் ஜவ்வுமிட்டாயின் சுவை தனிதான். இதனை இப்போது தொழிலாக எடுத்து செய்யும் போது, மார்க்கெட்டில் உங்களுக்கு என்று தனி இடம் மற்றும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இனி ஜவ்வுமிட்டாய் தயாரிக்கும் முறையை பற்றி விரிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் :

                           * வெல்லம்

                           * வேர்க்கடலை

                           * நெய் (அல்லது) தேங்காய் எண்ணெய்

                           * ஏலக்காய்

செய்முறை :

                   * முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு வெல்லம் முழுகும் வரை தண்ணீர் விட்டு அதில் ஏலக்காயையும் போட்டு சூடேற்ற வேண்டும்.

                   * பின்பு வேர்க்கடலை வறுத்து, தோல் நீக்கி ஒன்றிரண்டாக உடைத்து வைத்து கொள்ள வேண்டும்.

                   * மேலும் வெல்லம் கரைந்ததும் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து வடிகட்டி அதிலுள்ள கசடுகளை நீக்கி கொள்ளவும். பின்னர் திரும்பவும் அடுப்பில் வைத்து பொங்கும் நிலை வரும் வரை சூடுப்படுத்த கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

                   * பின்னர் அதனை ஒரு பெரிய தட்டில் நெய் (அல்லது) எண்ணெயை ஊற்றி, அதில் காய்ச்சிய பாகினை ஊற்ற வேண்டும். மேலும் அதன் மேலே உடைத்த வேர்க்கடலையை பரவலாக போட வேண்டும்.

                   * பின்பு அதனை கையில் சூடு தாங்கும் அளவிற்கு மிட்டாயினை இரு கைகளால் எடுத்து நன்றாக இழுத்து விட வேண்டும். நன்றாக இழுத்து விட விட ஜவ்வுமிட்டாயின் பதம் நன்றாக இருக்கும். அப்பதான் காக்கி கலரில் இருக்கும் மிட்டாய் இழுக்க இழுக்க நல்ல கோல்டன் கலருக்கு வரும், பிறகு அதனை விரும்பிய வடிவில் உருட்டி பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

விற்பனை முறை :

                * நாம் தயாரித்து பாக்கெட் செய்த மிட்டாயை அருகில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய பேக்கரி கடைகள் வரை விற்பனை செய்யலாம்.

ஜவ்வுமிட்டாய் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை