குறைந்த முதலீட்டில் எளிதாக ஒரு தொழில் தொடங்கி வெற்றி பெற சரியான ஒரு தொழில், மெழுகுவர்த்தி தயாரிப்பது தான். வீட்டில் மின்தடை ஏற்படும் நேரங்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது மெழுகுவர்த்தியை தான். ஆகையால் மெழுகுவர்த்தி அத்தியாவசிய பொருட்களுள் ஒன்றாக இருக்கிறது. மேலும் இந்த தொழிலை செய்வதற்கு குறைந்த முதலீடும், குறைவான இட வசதியும் இருந்தாலே போதுமானது ஆகும்.

மெழுகுவர்த்தி தயாரிக்க தேவையான பொருட்கள் :

                   * மெழுகு, காட்டன் நூல், அச்சு, அலுமினிய டிரே, மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை, கட் செய்ய சிறிய கத்தி, அடுப்பு, தேங்காய் எண்ணெய், க்ரையான்ஸ், புளோரிசன் கெமிக்கல், பக்கெட் பேக்கிங் செய்வதற்கான கவர்கள், எசன்ஸ் - ஜாஸ்மின் தாழம்பூ போன்றவை மெழுகுவர்த்தி தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகும்.

செய்முறை :

               * கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி அதை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு சூடேற்ற வேண்டும். அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவ வேண்டும்.

               * பின்னர் சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும். சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும் அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.

              * மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.

விற்பனை :

                 * உற்பத்தி செய்த மெழுகுவர்த்திகளை மளிகை கடைகள் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களை அனுகி ஆர்டர்கள் பெற்று விற்பனை செய்யலாம். அதுமட்டுமின்றி மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தனியே கடைகளும் உள்ளன.

மெழுகுவர்த்தி தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை