இட்லி, தோசை போன்று மிகவும் விரும்பிச் சாப்பிடும் மற்றொரு உணவு இடியாப்பம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இதனை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதை தினமும் வீட்டில் செய்வதென்றால் முடியாது. காரணம் செய்முறை சரியாக இருந்தால்தான் சுவையான இடியாப்பம் கிடைக்கும். இன்றைய பரபரப்பான உலகில் யாருக்கும் பொறுமையாக இடியாப்பம் செய்ய நேரமில்லை. தரமான, சுவையான இடியாப்பம் ரெடியாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதனை பயன்படுத்தி ரெடிமேட் இடியாப்பம் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நிறைவான இலாபம் அடையலாம்.

தேவையான பொருட்கள்:

                            * அரிசி மாவு

                            * உப்பு சிறிதளவு

தயாரிக்கும் முறைகள்:

                    * முதலில் அரிசி மாவை பதமான முறையில் சளித்து எடுத்துக் கொண்டு, அதனை முறையாக இடியாப்ப மாவு பிசையும் இயந்திரத்தில் போட்டு பிசையவேண்டும். பிறகு பிசைந்த மாவை இடியாப்பம் பிழிந்தெடுக்கும் இயந்திரத்துக்கு மாற்ற வேண்டும்.

                    * குறிப்பிட்ட எடையில் வட்டமாக முறுக்கு பிழிவதுபோல் அந்த இயந்திரமே பிழிந்தெடுத்துவிடும். இதை ஓவனில் வைத்து 55 - 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காய வைக்கவேண்டும்.

                    * இப்படி காய்ந்த இடியாப்பத்தை பேக்கிங் செய்து அனுப்ப வேண்டியதுதான். இந்த நவீன ஓவன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,200 இடியாப்பம் தயார் செய்ய முடியும்.

பயன்படுத்தும் முறை:

                       இந்த இடியாப்பத்தை மீண்டுமொருமுறை வேகவைக்க வேண்டாம். சூடான நீரில் நனைத்தாலே சாப்பிடும் பக்குவத்துக்கு வந்துவிடும். விற்பனைக்கு கொண்டு செல்லும்போது செய்முறை விளக்கத்தையும் தந்துவிட்டால் மார்க்கெட்டிங் செய்வதில் சிக்கல் இருக்காது.

விற்பனை முறைகள்:

                    இதனை ஆர்டரின் பேரில் திருமணவிழாக்களுக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் கொடுத்து நல்ல இலாபம் பார்க்கலாம்.

ரெடிமேட் இடியாப்பம் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை