இனிப்பு என்றாலே நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்றாகும். அதிலும் இப்போது நாம் உண்ணும் இனிப்பு வகைகளை காட்டிலும் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றான தேங்காய் மிட்டாய் நம் உடல் நலத்துக்கும் எந்தவிதமான தீங்கு விளைவிக்காத இனிப்பு வகையாகும். அதனை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபம் ஈட்ட முடியும்.

தேவையான பொருட்கள்:

                                * தேங்காய்

                                * சர்க்கரை

                                * முந்திரிப் பருப்பு

                                * ஏலக்காய் தூள்

                                * நெய்

தயாரிக்கும் முறை :

                 * முதலில் தேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும்.

                * பிறகு தேவையான முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

               * மேலும் ஒரு அடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

              * பின்பு பாகு தயாரானதும் அதில் தேங்காய்த் துருவலை சேர்த்துக் கிளற வேண்டும். நன்றாக மிட்டாய் திரண்டு வரும்போது வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

              * பின்னர் ஒரு பெரிய தட்டில் நெய் தடவி கொண்டு அதில் காய்ச்சிய மிட்டாயை கொட்டி ஆற விடவும். பாதி ஆறியதும் நமக்கு தேவையான அளவுகளில் துண்டு போட்டு கொள்ளலாம்.

              * நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் தேங்காய் மிட்டாய் ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.

விற்பனை செய்யும் முறை :

                    தயார் செய்த தேங்காய் மிட்டாயை டப்பாவில் அடைத்து அருகில் உள்ள கடைகளுக்கு மொத்தமாகவும் அல்லது சில்லரையாகவும் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.

தேங்காய் மிட்டாய் தயாரிக்கும் முறை

கருத்துகள் இல்லை