காய்ச்சல் கட்டம் :
* கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம் 104, 105, 106 என்று அதிக அளவில் உள்ள காய்ச்சல் ஆகும். உடம்பு வலியும், தலை வலியும் வரும். சிலருக்கு வாந்தியும் இருக்கும். இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும். வெகு சிலருக்கு, சரும தடிப்புகள் உண்டாகும். அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து விட்டு பின்பு மறையும். சிலருக்கு வாய் மற்றும் மூக்கின் உள்ளே அமைந்திருக்கும் சளிச்சவ்வுகளில் இரத்த பெருக்கு உண்டாகும். இந்த காய்ச்சல் சற்று வித்தியாசமானது. ஒரு நாள் காய்ச்சலே இல்லாதது போல் தோன்றும். மறுநாள், வந்துவிடும்.நெருக்கடியான கட்டம் :
* இந்த கால கட்டத்தில், இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும், Plasma என்ற நிறமற்ற திரவம், இரத்த நாளத்தை விட்டு வெளியேறி செல்கிறது. இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். மார்பகம், அடி வயிற்று பகுதிகளில் இந்த நிறமற்ற திரவம் குவிந்து கொள்கிறது. இவ்வாறு இந்த நிறமற்ற திரவம் இரத்த அணுக்களை ஏந்தி செல்லும் வேலையை செய்யாமல் பந்த் செய்வதால் முக்கியமான உடல் உறுப்புகளுக்கு இரத்தம் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் உடம்பு திணறி போகும். இதனால், பல உறுப்புகள் செயல்படாமல் போகக்கூடும். மேலும், இரைப்பை குடலில் அதிகமான இரத்த பெருக்கு உண்டாகக்கூடும்.மீட்புக் கட்டம் :
* இந்த மீட்பு கட்டத்தில், இரத்த நாளத்தை விட்டு நீங்கி சென்ற அந்த நிறமற்ற திரவம் திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேரும். இது ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும். அத்தகைய தருணத்தில், ஒரு சிலருக்கு உடம்பு முழுவதும் ஒரு அரிப்பு தோன்றும்.{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
கருத்துகள் இல்லை