வேலைக்கு செல்பவர்களுக்கு விதவிதமாக சமையல் செய்வது என்பது முடியாத ஒன்றாகவே உள்ளது. வேலைச்சுமையால் அவர்கள் பெரும்பாலும் காலை டிபன் செய்வதை தவிர்க்கின்றனர். இல்லையேல் கடைகளில் விற்கும் ஜாம் வகைகளை இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிக்கு பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தி நாம் வீடுகளில் தொக்கு வகைகளை சுத்தமாகவும், பாரம்பரிய முறைப்படியும் தயாரித்து விற்பனை செய்து இலாபம் அடையலாம்.
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
* இஞ்சி - 100 கிராம்
* தாளிக்க - நல்லெண்ணெய்
* மிளகாய் - 15
* கடுகு - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் பொடி - 3 டீஸ்பூன்
* உப்பு - ருசிக்கு
* பெருங்காயப் பொடி - சிறிதளவு
* பிறகு பொடி செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக கருகாமல் சிறு தீயில் வைத்து வறுத்து பொடி செய்யவும்.
* தக்காளியுடன் சேர்த்த நீர் ஆறியதும் அந்த தண்ணீரை வடித்து விட்டு தக்காளியின் தோலை பொறுமையாக உறிக்கவும், பின்பு இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின் இந்த தக்காளி, இஞ்சி மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
* இப்போது அடி கனமான இரும்புச்சட்டியை அடுப்பின் மேல் வைத்து அதில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த பின் கடுகு தாளித்து பிறகு அதில் அரைத்த கலவையை சேர்த்து சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளற வேண்டும்.
* தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும் போது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். இதோடு ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து சுருளக் கிளறி, கீழ் இறக்கிய பின்பு மிளகாய்,கடுகு, சீரகம் மற்றும் வெந்தயப் பொடிகளைச் சேர்த்துக் கிளறவும். இதில் எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு கிளற வேண்டும். இப்போது தக்காளித் தொக்கு ரெடி.
தக்காளித் தொக்கு தேவையான பொருட்கள் :
* தக்காளிப் பழம் - 1 கிலோ* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
* இஞ்சி - 100 கிராம்
* தாளிக்க - நல்லெண்ணெய்
பொடி செய்ய தேவையானவை :
* மிளகாய் - 15
* கடுகு - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் பொடி - 3 டீஸ்பூன்
* உப்பு - ருசிக்கு
* பெருங்காயப் பொடி - சிறிதளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த தக்காளியைப் போட்டு, அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும்.* பிறகு பொடி செய்ய தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக கருகாமல் சிறு தீயில் வைத்து வறுத்து பொடி செய்யவும்.
* தக்காளியுடன் சேர்த்த நீர் ஆறியதும் அந்த தண்ணீரை வடித்து விட்டு தக்காளியின் தோலை பொறுமையாக உறிக்கவும், பின்பு இஞ்சியைத் தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின் இந்த தக்காளி, இஞ்சி மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
* இப்போது அடி கனமான இரும்புச்சட்டியை அடுப்பின் மேல் வைத்து அதில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த பின் கடுகு தாளித்து பிறகு அதில் அரைத்த கலவையை சேர்த்து சிறு தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மீதம் உள்ள எண்ணையை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளற வேண்டும்.
* தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும் போது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயப் பொடிகளைச் சேர்க்கவும். இதோடு ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து சுருளக் கிளறி, கீழ் இறக்கிய பின்பு மிளகாய்,கடுகு, சீரகம் மற்றும் வெந்தயப் பொடிகளைச் சேர்த்துக் கிளறவும். இதில் எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு கிளற வேண்டும். இப்போது தக்காளித் தொக்கு ரெடி.
கருத்துகள் இல்லை