படர்தாமரை என்பது உடலில் ஏற்படும் ஒரு பூஞ்சைக்காளான் தொற்றுநோய் ஆகும். சருமத்தில் அழற்சி போன்று வட்ட வடிவில் சிவப்பாக ஏதேனும் இருந்தால், அது தான் படர்தாமரை. இந்த பிரச்சனை பெரியோர்களை விட குழந்தைகளுக்கு தான் அதிகம் ஏற்படும். படர்தாமரை பரவக்கூடிய ஒன்று. சருமத்தில் ஏற்படும் மற்ற பிரச்சனைகளைப்போன்றது அல்ல. எனவே படர்தாமரை உங்களுக்கு இருந்தால், அதனைப் போக்க உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

                    * நீரிழிவு நோய் தாக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும். ஊட்டச்சத்து குறைபாடு. மக்கள் நெருக்கடி அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்படும். தண்ணீரில் அதிகம் புழங்குபவர்களுக்கு ஏற்படும். உடல் பருமன் அதிகமாயிருத்தல்.

                   * படர்தாமரை மூன்று வகைகள் உள்ளன. அவை தொடை இடுக்குபடை படர்தாமரை, நகப்படை படர்தாமரை, கால்ப்படை படர்தாமரை ஆகியன ஆகும்.

                   * தொடை இடுக்கு படை படர்தாமரையானது சுத்தமில்லாத இடங்களில் படுத்து உறங்குவதன் மூலமும், அசுத்தமான துணிகள் மூலமும் தொடை இடுக்குகளில் வட்ட வட்டமாகப் படையும் அரிப்பும் தோன்றுகிறது. நீரிழிவு நோய் கட்டுப்படாதவர்களுக்குத் தொடை இடுக்குகளில் இது அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும்.

                   * நகப்படை படர்தாமரையானது பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் மட்டுமே ஏற்படுகிறது. நகத்தின் கடினமான பகுதியைக் காளான் கிருமிகள் பாதிக்கும்போது, நகம் தன் இயற்கை நிறத்தை இழக்கிறது. மினுமினுப்புத் தன்மையும் கடினத் தன்மையும் குறைந்து நகப்படைத் தோன்றுகிறது.

                   * கால்ப்படை படர்தாமரையானது கால் விரல் இடுக்குகளில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். அரிப்பும் வலியும் தொல்லை தரும். கொப்புளங்கள் வெடித்துப் புண் உண்டாகும். சிலருக்கு இது கை விரல் இடுக்குகளில் ஏற்படுகிறது. ஈரமான இடத்தில் அதிக நேரம் கால்களை வைத்திருப்பதாலும் கை விரல்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் இந்த நோய் உண்டாகிறது.

                   { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

படர் தாமரை ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை