இருசக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளை பார்ப்பது இன்று மிகவும் அரிதான ஒன்றாகும். இருசக்கர வாகனத்தின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்த இருசக்கர வாகனத்துக்கு தேவையான உதிரி பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் மார்க்கெட்டில் நமக்கென ஒரு நிரந்தர இடத்தை இலகுவாக எட்ட முடியும். எத்தனை வகையான உதிரி பாகங்கள் இருந்தாலும் முதலில் நம் கண்ணை பறிப்பது சீட் கவர்தான். இதனாலேயே மக்கள் பல பல வண்ண சீட் கவர்களுடன் இன்றும் வலம் வருகின்றனர். இந்த தொழிலில் புது புது வண்ண யுத்திகளை கையாண்டால் பல மடங்கு லாபத்தை சில மாதங்களிலே அடைந்து விடலாம்.

தயாரிக்கும் முறை :

                 * இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண்டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்கமாக கொண்டு வர வேண்டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.

                * டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.

உற்பத்தி பொருட்கள் :

                    * ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.

கிடைக்கும் இடங்கள் :

                       * டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.

                      * ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம்.

சீட் கவர் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை