எத்தனை வகையான திண்பண்டங்கள் இருந்தாலும் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. விதவிதமான சுவையோடு தரமாக பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்கவும் நிறையவே வாய்ப்புள்ளன.

பிஸ்கட் தயாரிக்க தேவையான பொருட்கள் :

                     * கோதுமை மாவு

                     * மைதா மாவு

                     * நெய் அல்லது வனஸ்பதி

                     * சர்க்கரை

                     * பால் அல்லது பால் பவுடர்

                     * உப்பு

                     * டவ் இயந்திரம்

தயாரிக்கும் முறை :

                  * கோதுமை மற்றும் மைதாவை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

                  * பின்னர் இந்த மாவுடன் சர்க்கரை, பால், நெய், உப்பு போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

                  * பிறகு டவ் இயந்திரம் மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

                  * பிஸ்கட் பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, இதனை ஈரப்பதம் இல்லாத இடங்களில் சேகரிக்க வேண்டும்.

                  * பின்னர் இதனை நம் நிறுவனத்தின் பெயரில் பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.

                  * தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுகளை வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நிறைய லாபம் பெறலாம்.

பிஸ்கட் தயாரிக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை