நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.

அல்சரின் வகைகள்:

                         இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படும்.

அல்சர் ஏற்படுவது எதனால்?

                    * பொதுவாக நம் வயிற்றில் பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.

                    * நேரந்தவறி சாப்பிடுவதாலும், அதிகம் சூடாகச் சாப்பிடுவதாலும், பட்டினி கிடப்பதாலும் இரைப்பையில் புண்கள் வரும்.

                    * புகைப்பிடித்தல், மது அருந்துதல், மென் குளிர்பானம், பானங்களை அதிகமாகக் குடிப்பது.

                    * மோசமான சுற்று சூழல், கலப்படம் செய்யப்பட்ட உணவு, அசுத்தமானக் குடிநீர், ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவற்றால் குடல் புண் ஏற்படுகிறது.

                   * அதிகமான காரம் நிறைந்த உணவுப்பொருட்கள் உண்பது, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதனால் ஏற்படுகிறது.

                   * கவலை மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்.

                   * மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதாலும் ஏற்படும்.

                   * தினமும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அல்சர் நோய் ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை