சிறுநீரகம் செயலிழப்பு என்றால் என்ன?

                        இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிறுநீரகங்கள் (Kidney) அமைந்துள்ளன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாமல் போவதுதான் சிறுநீரக செயலிழப்பு எனப்படும். சிறுநீரகம் செயலிழப்பு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்படக் காரணங்கள் :

                     * சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இன்னும் பல காரணங்களால் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்கள் ஏற்படக்கூடும்.

                     * அடிக்கடி வலி நிவாரணி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுதல், எந்த மருந்தெனினும் மருத்துவர் பரிந்துரையின்றி சுய வைத்தியம் செய்து கொள்ளுதலில் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.

                    * ஓட்டப்பந்தய வீரர்கள் நீண்ட தூரம் ஓடும்போது, போதுமான அளவு நீர் அருந்துவது இல்லை. இதனால் திசுக்கள் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து புரதம் வெளிப்படும். அதிக அளவில் புரதம் வெளியேறி ரத்தத்தில் கலக்கும்போது, மயோகுளோபின் எனும் பிரச்சனை ஏற்பட்டு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட காரணமாகிறது.

                   * பாம்புக்கடி, சிறுநீரக அலர்ஜி, நஞ்சு, போதைப்பொருள், கடுமையான தொற்று நோய்கள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படுகின்றன.

                     { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

சிறுநீரக செயலிழப்பு ஏற்படக் காரணங்கள்

கருத்துகள் இல்லை